News June 11, 2024
திருவள்ளூர்: இங்கு மின்தடை அறிவிப்பு

திருத்தணி கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். மின்தடை ஏற்படும் பகுதிகள்: நெட்டேரி கண்டிகை, கிருஷ்ணசமுத்திரம், இஸ்லாம் நகர், ஆர்.வி.என்.கண்டிகை, புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
Similar News
News July 8, 2025
மனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்க அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் 20.10.2016 க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரைமுறை செய்து கொடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் அறிக்கை மூலமாக தெரிவித்தார். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
News July 8, 2025
முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரர்/சார்ந்தோர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக குறைபாடுகள்/சிரமங்கள் SPARSH இணையதளத்தில் ஏதேனும் இருப்பின் அதனை களைந்திடும் பொருட்டு கண்ட்ரோலர் ஒப்பி டேபின்ஸ் அக்கௌன்த்ஸ் தேனாம்பேட்டை திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் ஜூலை 9,10 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.