News January 1, 2026
திருவள்ளூர்: ஆன்லைனில் VOTER ID பெற எளிமையான வழி!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த<
Similar News
News January 6, 2026
திருவள்ளூர்: குளத்தில் தத்தளித்து பலி!

பொன்னேரி: சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதி(21). இவர் நேற்று(ஜன.5) மாலை தனது நண்பர்களுடன் தடப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள குளக்கரைக்கு குளிக்கச் சென்றார். மது அருந்தி குளத்தில் இறங்கிய அவர், சேற்றில் சிக்கி உயிரிழந்தார், அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 6, 2026
திருத்தணி கோயிலுக்கு செல்ல சூப்பர் இலவச வசதி

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து தேர்வீதிக்கு செல்வதற்கு வசதியாக கோயில் சார்பில், இலவச வேன் இயக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை அழைத்து செல்வதற்கு உபயதாரர் மூலம், ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஆம்னி வேன் பெறப் பட்டது. இந்த வேனை நேற்று(ஜன.5) கோயில் இணை ஆணையர் ரமணி தொடங்கி வைத்தார்.
News January 6, 2026
திருவள்ளூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


