News December 25, 2025
திருவள்ளூர்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

திருவள்ளூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 25, 2025
திருவள்ளூரில் ட்ரெக்கிங் போக செம ஸ்பாட்

திருவள்ளூரில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக குடியம் குகைகள் உள்ளது. வனத்துறை மூலம் அழைத்து செல்லப்படும் இந்த மலையேற்றம் மலையேற்றத்தோடு, தொல்லியல் சின்னங்களை பார்த்த அனுபவத்தை தரும். ஒருவருக்கு ரூ.849 வசூலிக்கப்படும் நிலையில்,<
News December 25, 2025
திருவள்ளூரில் இன்றைய ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (25.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News December 25, 2025
குழந்தையை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை

பொன்னேரி அண்ணாமலைச்சேரியைச் சேர்ந்தவர்கள் அர்ஜுன் (31) பூஜா 25) திருமணமாகி 3 1/2 வருடம் ஆகிய நிலையில் ருத்விகா (3 மாதம்) என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் கைகால் அசைவு இல்லாததால் மருத்துவர்கள்SMA எனப்படும் ஸ்பைனல் மஸ்குல்லர் அட்ரபி ஸ்டேஜ் 1 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரி செய்ய 16 கோடி ரூபாய் செலவாகும் ஆதலால் குழந்தையை காப்பாற்ற தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.


