News December 8, 2025
திருவள்ளூர் ஆட்சியருக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.08) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சந்தித்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தமிழ் நாடு- தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சி 3 வது இடத்திற்கு பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர், வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ஆகியோர் இருந்தனர்.
Similar News
News December 10, 2025
திருவள்ளூர்: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

திருவள்ளூர் மாவட்ட மக்களே..,மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 காலி[ப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 வயதில் இருந்து 24 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 10, 2025
ஆரப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை

திருவள்ளூர் மாவட்டம் ஏலவூர் மற்றும் ஆரம்பாக்கம் பகுதியில் மின் பராமாரிப்பு பணிக்காக நாளை டிச. 10 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு இதனால் பெத்திக்குப்பம் மகாலிங்க நகர் தூரப்பள்ளம் ஆரம்பாக்கம் ஊராட்சி எகுமதுரை ஊராட்சி பூவாலை ஊராட்சி தேக்கம்பூர் ஊராட்சி ஏலவூர் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
News December 10, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை

மல்லியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜோதீஷ்(26). இவரது மனைவி புவனேஸ்வரி(21) கர்ப்பமான நிலையில், கும்மிடிப்பூண்டி தனியார் மருத்துவமனையில் கடந்த 8ஆம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் பலவீனமாக குழந்தை பிறந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தவறான சிகிச்சை புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.


