News April 15, 2025

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பலி

image

திருவள்ளூர், கனகம்மாசத்திரம் அருகே காவேரி ராஜபுரம் கிராமத்தில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் முனிரத்தினம் என்பவரை டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸ் போடக் கூறியுள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். *மின்சாரத்தை கையாளுவதை தவிர்க்கவும்*

Similar News

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

News April 16, 2025

திருவள்ளுவரில் மீன் பிடி தடைக் காலம் அமலுக்கு வந்தது

image

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜீன்14 வரை 61நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு மீன்பிடி தடை செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள 16 கடலோர மாவட்டங்களில் உள்ள இந்த தடை அமலுக்கு வந்தது. இதனையொட்டி இந்த காலத்தில் தமிழக அரசு தரும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

News April 16, 2025

இரட்டை கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

image

ஆவடி அடுத்த விளிஞ்சியம்பாக்கத்தில் பண்ணை வீட்டில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களான ஜெகதீசன், விசாலினி தம்பதியர் வசித்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி பூவலட்சுமி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பூவலட்சுமி சிறையில் இறந்த நிலையில், சுரேஷிற்கு பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.

error: Content is protected !!