News August 16, 2024
திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய பிரபல ரவுடி கைது

திருவள்ளூர் அடுத்த சோழவரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆந்திராவில் பதுங்கி இருந்த டியோ கார்த்திக், விக்கி, சுரேஷ், உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Similar News
News October 30, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற (நவ-3) அன்று காலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர்கள் (நவ-2) அன்று மாலை 6 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8072908634 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
News October 30, 2025
புத்த, சமண, சீக்கிய மதத்தினர் யாத்திரை செல்ல மானியம்

திருவள்ளூர்: தமிழ்நாட்டைச் சார்ந்த 50 புத்த மதத்தினர் 50 சமண மதத்தினர் 20 சீக்கிய மதத்தினர் யாத்திரை மானியமாக சுமார் ஒரு நபருக்கு ரூ10,000விதம் 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற நவ.30ம் தேதிக்குள் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் மனுக்களை பதிவிறக்கம் செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News October 30, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


