News September 30, 2024
திருவள்ளூர் அருகே கட்சி தலைவரின் கணவர் மீது தாக்குதல்

தமிழர் விடுதலைப் படை தலைவர் வீரலட்சுமி இவரது கணவர் கணேசன். இவர்கள் வேப்பம்பட்டு பெரியார் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு பக்கத்தில் வசிப்பவர் சாப்பிட்ட இலைகளை இவர்களது வீடருகே கொட்டியுள்ளனர்.இதனை வீரலட்சுமி கணவர் கணேசன் தட்டிக் கேட்டுள்ளார்.இதனால் வாய் தகராறு ஏற்பட்டு கணேசனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர்.அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Similar News
News September 11, 2025
திருத்தணி வந்த நடிகை ரோஜா

ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர், திரைப்பட நடிகை ஆர்.கே.ரோஜா திருத்தணி ஜாத்திரை திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின் பக்தர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். மேலும், அங்கிருந்தவர்கள் நடிகை ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
News September 11, 2025
திருவள்ளூரை வெளுக்க வரும் மழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று(செப்.11) காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.
News September 11, 2025
திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (செப் 12) அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.