News July 18, 2024
திருவள்ளூர்: அரசு பேருந்து மோதி பெண் பலி

திருவேற்காடு அருகே வடநூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயா (58). இன்று காலை இவர் வீட்டிலிருந்து வேலைக்கு வேலப்பன்சாவடி மேம்பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்து ஜெயா மீது மோதியதில், சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் ஆனந்தம் (48) என்பவரை கைது செய்தனர்.
Similar News
News August 31, 2025
திருவள்ளூர்: சம்பள பிரச்சனையா? ஒரு CALL போதும்

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147. ஆட்சியர் அலுவகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 31, 2025
BREAKING: திருவள்ளூர் எம்.பி 3வது நாளாக…. பரபரப்பு

மத்தியரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் மருத்துவமனையிலும் உணவு உண்ண மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்தியரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
News August 31, 2025
திருவள்ளுர்:அதிகாரிகளால் ரூ.12 கோடி வீண்; கலெக்டர் உத்தரவு

திருவள்ளுர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளுக்கு, 2023 – 24ம் ஆண்டு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், 12.97 கோடி ரூபாய் பணிகளை கலெக்டர் பிரதாப் ரத்து செய்து, நிதியை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் ரூ.3,32,46,204 திருப்பி அனுப்ப பட உள்ளது.