News May 14, 2024
திருவள்ளூர்: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 36ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருவள்ளூர் மாவட்டம் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 75.51% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 64.16 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.05 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 19, 2025
திருவள்ளூர்: தொடர்ந்து இரண்டு கோயில்களில் கொள்ளை

திருவள்ளூர்: செஞ்சி பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள முருகன் மட்டும் அம்மன் ஆலயங்களில் பூட்டை உடைத்து நேற்று(நவ.17) இரவு அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி மற்றும் உண்டியலை உடைத்து திருட்டுச் சம்பவம் அரங்கேரி உள்ளது இந்த திருட்டு சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 19, 2025
மீஞ்சூர்: வாலிபருக்கு அரிவாள் வெட்டு!

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு, புதுந்கர், அங்காளம்மன் கோவில் 2ஆவது தெருவில் பள்ளம் பகுதியில் வசிப்பவர் பாண்டியன்(35). இவர் மீட்டின் முன்பு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது 4 பேர் கொண்ட கும்பல், பாண்டியனை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடினர். இதுகுறித்த புகாரில் சூரைவேந்தன்(20), கோகுல்ராஜ்(19), யுவராஜ்(32) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
News November 19, 2025
பராமரிப்பு பணிகள் காரணமாக 49 மின்சார ரயில்கள் ரத்து

திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் வரும் 23-ந்தேதி காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.


