News October 2, 2025

திருவள்ளூர்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம்<<>> மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 31, 2025

திருவள்ளூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News October 31, 2025

திருவள்ளூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

திருவள்ளூர்: லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., கைது

image

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆபரேட்டர் சுகுமார் ஆகியோர் வாகனத்தை விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர். தாராட்சி பகுதியைச் சேர்ந்த அஜித் குமாரிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் நடந்த சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!