News October 27, 2025

திருவள்ளூரை பதம் பார்க்கும் ‘மோன்தா’

image

வங்கக்கடலில் மோன்தா புயல் நேற்று நள்ளிரவு உருவான நிலையில் இன்று (அக்.27) திருவள்ளூர்க்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது. நாளை தீவிர புயலாக மாறும் மோன்தா ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மக்களே முன்னெச்சரிக்கையா இருங்க.

Similar News

News October 27, 2025

திருவள்ளூர்: உங்கள் PHONEல் இது இருப்பது கட்டாயம்

image

1) TN alert: உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2) நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3) தமிழ் நிலம்: பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4) e-பெட்டகம்: உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5) காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க! உடனே ஷேர் பண்ணுங்க

News October 27, 2025

திருவள்ளூர் மாவட்ட மழை பதிவு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில், ஜொமின் கொரட்டூர் 53 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் திருத்தணி 42 மி.மீ.ஊத்துகோட்டை 6 மி.மீ. திருவாலங்காடு 7மி.மீ மழை பூவிருந்தவல்லி 2.5மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. மேலும் இன்றும் மழை இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

News October 27, 2025

திருவள்ளூர்: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1<>.இங்கு க்ளிக்<<>> பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க. 2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க 3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. 7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!