News August 8, 2025
திருவள்ளூரில் EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 12, 2025
பொன்னேரி: முடிதிருத்தம் தொழிலார்கள் முற்றுகை

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் அடாவடி வசூல் செய்வதாகவும், தொழில் வரி வசூல் செய்வதில் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்களை மிரட்டுவதாகவும் கூறி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(டிச்.12) 50க்கும் மேற்பட்டோர் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
News December 12, 2025
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிச.13) மற்றும் நாளை மறுநாள் (டிச.14) ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் குறித்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
திருவள்ளூர்: மாணவிகள் முன்பு ஆபாச செயல்!

ஆவடி: அயப்பாக்கம் மாநகர பஸ் தடம் எண் 73C அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் நோக்கி சென்றது ICF காலனியில் கஞ்சா போதையில் பஸ்சில் அரை நிர்வாணமாக ஏறிய வாலிபர் பஸ்சில் இருந்த பள்ளி மாணவிகள் முன்பு நடனம் ஆடியதுடன், ஆபாச மாக பேசினார் இதனால் சக பயணிகள், டிரைவர், கண்டக்டர் அதிர்ச்சி அடைந்தனர். அம்பத்தூர் காவல் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி, போதை வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்து வருகின்றனர்.


