News June 19, 2024
திருவள்ளூரில் 63 மி.மீ மழை பதிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று(ஜூன் 19) காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூரில் அதிகபட்சமாக 63 மி.மீ, திருத்தணி – 51 மி.மீ, செங்குன்றம் – 42 மி.மீ, ஆர்.கே.பேட்டை – 39 மி.மீ, தாமரைப்பாக்கம் – 38 மி.மீ, திருவேலங்காடு – 28 மி.மீ மற்றும் ஆவடியில் 20 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 346 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News May 7, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News May 7, 2025
எம்ஜிஆருக்கு கோயில் கட்டிய ரசிகர்

அரசியலில் மறக்கமுடியாத தலைவராகவும், நடிகராகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கு இன்றும் ரசிகர்கள் உள்ள நிலையில், அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக திருவள்ளூர் நாத்தமேட்டில் எம்.ஜி.ஆருக்கு கோயில் காட்டியுள்ளார் கலைவானன் என்பவர். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான கலைவானன் அவரது மனைவி கனவில் வந்து கேட்டதற்காக இந்த கோயிலை கட்டி பராமரித்து வருகிறார். ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
திருவள்ளூர் அரசு ஊழியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிந்து வரவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், “அரசு ஊழியர்கள் அலுவலர்கள் தலைகவசம் அணிந்து வருவதை அந்தந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வரும் அரசு ஊழியர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கபடும்” எனவும் எச்சரித்துள்ளார்.