News April 5, 2025
திருவள்ளூரில் 2லட்சம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் சின்னம்

பூண்டி நீர்த்தேக்கத்தை தாண்டி அமைந்துள்ளது குடியம் கிராமம். இக்கிராமத்தை ஒட்டி இருக்கும் குகைகளில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர். இப்பகுதியை ஆங்கிலேய தொல்லியல் அறிஞரான ராபர்ட் ப்ருஸ் ஃபுட் முதன்முதலில் கண்டறிந்தார். அதுமட்டுமின்றி இவ்விடம் பழைய கற்கால மனிதர்கள் கை கோடாரி செய்யும் பகுதியாக இருந்தது. அதற்கு ஏற்ப இவ்விடத்தில் அதிகமான அளவில் மிக பழமையான கை கோடாரிகளை காணலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 5, 2025
டீம் லீடர் பணிக்கு வேலைவாய்ப்பு

திருவள்ளுர் ஆதித்யா பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டீம் லீடர் பணிக்கு வேலை வாய்ப்பு. இவ்வேலைக்கு உயர்கல்வி (12வகுப்பு) தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000-25,000 வழங்கப்படும். இப்பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை<
News April 5, 2025
தரை பாலத்தின் கீழ் கிடந்த ஆண் சடலம்

திருவள்ளூர், ஆர்கே பேட்டை அடுத்த அம்மையார் குப்பத்தை சார்ந்த ராமலிங்கம் மகன் விஜயகாந்த் 34 நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. கீழ்மோசூர் செல்லும் சாலையில் இறந்த கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு திருத்தணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்ததில் சடலமாக இருந்தவர் விஜயகாந்த் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 4, 2025
திருவள்ளூர் மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக உதவி எண்- 18005997626 , 9840327626, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை- 044 – 27666746, பேரிடர் கால உதவி- 044-27664177, 9444317862, 1077, காவல் கட்டுப்பாட்டு அறை- 100, விபத்து உதவி எண்- 108, தீ தடுப்பு- 101, விபத்து அவசர வாகன உதவி- 102, குழந்தைகள் பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு- 1091, BSNL ஹெல்ப் லைன்- 1500. *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிரவும்