News October 12, 2025
திருவள்ளூரில் வெள்ளப்பெருக்கு! போக்குவரத்து பாதிப்பு

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையால், பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து சில தினங்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, சத்தரை பகுதியில் கூவம் ஆற்றில் அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை வெள்ளநீரால் சேதமடைந்தது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் பேரம்பாக்கம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
திருவள்ளூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News March 8, 2026
திருவள்ளூர்: மகளிருக்கு இந்த எண்கள் அவசியம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
கும்மிடிப்பூண்டி; இலங்கை தமிழர் முகாமில் படுகொலை!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தலைவராக இருந்தவர் சிவகுமார் என்கின்ற கண்ணன்(42). நேற்று(மார்ச் 7) இரவு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பகுதியில் இருதரப்பு சமரசத்திற்கு சென்ற சிவகுமார் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


