News November 1, 2025

திருவள்ளூரில் விடுமுறை இல்லை

image

மோன்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று( நவ.1) முழுநேரம் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டிற்கும் பள்ளிகள் செய்லபடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற உள்ளதால் இரு மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

திருவள்ளூர்: மெட்ரோவில் சூப்பர் வேலை; ரூ.30,000 சம்பளம்!

image

சென்னை மெட்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். இதற்கு டிப்ளமோ, BE படித்த 18-33 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். மாதம் ரூ.27,000- 30,000 சம்பளம் வழங்கப்படும். சென்னையில் <>நவ.4,5,6,7 <<>>ஆகிய தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. ஷேர்!

News November 1, 2025

திருவள்ளூர்: கரை ஒதுங்கிய 4 உடல்கள்… உதவி கரம் நீட்டிய CM

image

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தேவகி, காயத்ரி, பவானி, ஷாலினி ஆகிய நான்கு பேரும் நேற்று எண்ணூர் கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது நான்கு பேரும் அலையில் சிக்கி மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு பேரும் குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்ததோடு, நான்கு பேரும் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

News November 1, 2025

திருவள்ளூர் இன்றைய ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (31.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!