News August 9, 2025

திருவள்ளூரில் புறநகர் ரயில்கள் ரத்து

image

கும்மிடிப்பூண்டி – சென்னை (10.45 மணி), கும்மிடிப்பூண்டி ( மதியம் 1, 3.15 மணி), சூலூர்பேட்டை (1.15, 3.10மணி ), கும்மிடிப்பூண்டி மூர் மார்க்கெட் ( 2.30 மணி) நெல்லூர் சூலூர்பேட்டை (மாலை 6.45) சூலூர்பேட்டை மூர் சந்தை (இரவு 9) ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, காலை 10:30 மூர் சந்தை – பொன்னேரி, காலை 11:35 மூர் சந்தை -மீஞ்சூர், மதியம் 12:40 கடற்கரை- பொன்னேரி தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது

Similar News

News August 19, 2025

திருவள்ளூரில் டிகிரி இருந்தால் வங்கி வேலை…

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <>www.ibps.in<<>> என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். உடனே விண்ணப்பியுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 19, 2025

ALERT: திருவள்ளூரில் கடலுக்கு செல்ல தடை

image

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரா அருகே இன்று கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசம். எனவே திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News August 19, 2025

திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் காவல்துறை வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில், வேலை வாய்ப்பு மோசடி ”வீட்டிலிருந்தே வேலை” தினமும் ரூபாய் 2000 வருமானம் என்று வாட்ஸ்அப்மெயில் மூலம் அழைப்பர். ஆரம்பத்தில் சிறிய வேலை கொடுத்து ரூ.100 – 500 போலியான சம்பளம் தருவார். அதன் பிறகு “பெரிய ப்ராஜெக்ட்” எடுக்க டெபாசிட் பணம் கொடுக்க வேண்டும் சொல்லி ஏமாற்றுவார்கள். பணம் அனுப்பியவுடன் தொடர்பை துண்டித்து விடுவார்கள் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!