News February 6, 2026

திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (பிப்.7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாளை அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை கால அட்டவணைப்படி செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆணைப்படி வேலை நாள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.

Similar News

News February 18, 2026

JUST IN: திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. 18 முதல் 35 வயது உள்ளவரும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணமாக ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை மானியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 18, 2026

திருவள்ளூரில் EB பில் எகிறுதா..?

image

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

திருவள்ளூரில் அதிரடி கைது!

image

ஆந்திராவில் இருந்து சிலர் பைக்கில் உத்துக்கோட்டை வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு விவேகானந்தா சுக்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஒரு பைக்கை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த சையத் முஷரப்(26), சுகுமார்(35) என்பதும், 4 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.அவர்களை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!