News August 15, 2024
திருவள்ளூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.இதில், 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 23, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

ஆந்திரா எல்லை கிராமமான பள்ளிப்பட்டு, குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், முனுசாமி (45) என்பவர் பாக்கெட்டுகளில் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார். தொடர்ந்து அவரை திருத்தணி மதுவிலக்கு போலீசார் அதிரடியாக கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 பாக்கெட்டுகள் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்துள்ளனர்.
News February 23, 2026
திருத்தணியில் 2 வாலிபர்கள் பரிதாப பலி!

திருத்தணி: பொன்பாடி சோதனைச்சாவடி அருகே, நேற்று தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த விஜய் (22), யுவகேஷ் (22) ஆகியோர் வந்த பைக், பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில், பைக்கில் பயணித்த இரு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
News February 23, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன் தினம் மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரும் நேற்று(பிப்.22) ரயில் மோதி பலியானார். இதில், இறந்தவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


