News August 5, 2024

திருவள்ளூரில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

image

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டத்துக்குட்பட்ட வெள்ளாத்தூர் கிராமம் சி.எம். அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியிலும், பள்ளிப்பட்டு ஒன்றியம் கரிம்பேடு பத்மாவதி திருமண மண்டபத்திலும் நாளை காலை 10 மணிக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

Similar News

News February 15, 2026

திருவள்ளூரில் பயங்கர தீ விபத்து!

image

கடம்பத்தூர் ஒன்றியம் புதுவள்ளூர் கிராமம், பால்வாடி தெருவைச் சேர்ந்தவர் விமலா(38). நேற்று முன் தினம் விமலா, வழக்கம் போல் தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்றார். அப்போது, அவரது வீட்டில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டது. இதனால், பயங்கர தீ பரவி, துணிமணிகல், சாமான்கள், சான்றிதழ்கள், ரூ.43 ஆயிரம் பணம் போன்றவை தீயில் எரிந்து நாசமானன. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 15, 2026

திருவள்ளூர்: கணவன் கொடுமையால் இளம்பெண் தற்கொலை!

image

பெங்களூரைச் சேர்ந்தவர் மோகனஸ்ரீ(27). இவருக்கும் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த குணசேகரன்(35) என்பவருக்கும் கடந்த 2021-யில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆஷிகா(3) என்ற மகள் உள்ளார். இருவரும் பெங்களூரில் வசித்த நிலையில், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவியை பூட்டி வைப்பது, தலையணை வைத்து கொலை செய்ய முயற்சிப்பது என தொடர் கொடுமைகள் நடந்துள்ளன. இதனால், அச்சமடைந்த மோகனஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார்.

News February 15, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!