News April 9, 2025
திருவள்ளூரில் தொழில் தொடங்க அழைப்பு

திருவள்ளூர் மகலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் தொழில் துவங்க ரூ.1 கோடி வரை வங்கி கடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 25 வயதுக்கு மேல் இருக்கும் மு.படைவீரர்கள் மகன்கள், முன்னாள் படைவீரருடன் இணைந்து பங்குதாரர் ஆக தொழில் தொடங்கலாம்’ என தெரிவித்தார். *ஷேர் பண்ணவும்*
Similar News
News April 17, 2025
ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூர், ஆவடியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சோதனையில் இறங்கினர். மேலும், மின்னஞ்சல் எதிரொலியால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்கு வருகிறது. *சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகியுள்ளது.
News April 17, 2025
திருவள்ளூருக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை வருகை

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்திற்கு நாளை (18.04.2025) பல்வேறு திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிக்கப்பட்ட திட்டப்பணிகள் துவக்க விழா, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். *முதல்வரை சந்திக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. மனு வழங்கவும் வாய்ப்புண்டு. நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூரில், 369 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த லிங்கை <