News January 8, 2026
திருவள்ளூரில் தீயில் கருகி பலி!

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட குருவியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள்(75). தனிய வசித்து வந்த இவர், கடந்த டிச.29ஆம் தேதி நள்ளிரவில் குளிர் காய பழைய காகிதங்களை எரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது உடையில் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றுவந்தவர், நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.
Similar News
News January 27, 2026
திருவள்ளூர் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

திருவள்ளூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
News January 27, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பின்படி, திருநங்கையர் தினத்தை முன்னிட்டு சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். மேலும், விருது பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, (பிப்.18)க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
News January 27, 2026
திருவள்ளூரில் நாளை விடுமுறை இல்லை!

திருவள்ளூர் மாவட்டத்தில் ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா 28-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் திருவள்ளூருக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக ஓர் தகவல் பரப்பப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தகவல் தவறானது எனத் தெரிய வந்துள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


