News August 14, 2024
திருவள்ளூரில் சிறப்பு முகாம்கள் அறிவிப்பு

திருவள்ளூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், பூந்தமல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வரும் 20,21,22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் பங்கேறு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
திருவள்ளூர்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில்<
News October 24, 2025
திருவள்ளூர்: சாலையில் தேங்கிய நீரில் விழுந்த தங்கம்

பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே பெண் ஒருவர் நடந்து சென்றபோது அவர் காதில் அணிந்திருந்த ஒரு பக்க தங்க கம்மல் கழன்று சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்தது. நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு சாலையில் தேங்கிய மழைநீரில் விழுந்த தங்க கம்மலை வட மாநில தொழிலாளர்கள் கண்டுபிடித்து கொடுத்தனர். சாலை குண்டும், குழியுமாக இல்லாதிருந்தால் கம்மலை கண்டுபிடிக்க இந்த போராட்டம் தேவையில்லை என சிலர் வசைபாடி சென்றனர்.
News October 24, 2025
திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் ரத்து

திருத்தணி முருகன் கோயிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா ஒட்டி நேற்று முதல் நாளை மறுநாள் வரை மூலவர் முருகப்பெருமானுக்கு காலை, 9:00 மணி முதல் நண்பகல், 11:00 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. இதனால் 2 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


