News September 20, 2025

திருவள்ளூரில் கூடுதலாக 304 ஓட்டுச்சாவடிகள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 304 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, அம்பத்துார், பூந்தமல்லி உள்ளிட்ட 10 சட்டசபை தொகுதிகளில், 35,31,045 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுதும் 1,315 பள்ளிகளில், 3,699 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 20, 2025

திருவள்ளூர்: அதிமுக முக்கிய நிர்வாகி காலமானார்

image

திருத்தணி நகரம் 16வது வார்டு ஜோதிநகர் அதிமுக கழக முன்னாள் மாவட்ட பிரதிநிதி S.ஆனந்தன் இன்று (செப்.20) அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு திருத்தணியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

News September 20, 2025

திருவள்ளூர்: 10th பாஸ் போதும்…காவல்துறையில் வேலை!

image

தமிழ்நாடு காவல்துறையில் கான்ஸ்டபிள், சிறைக் காவலர், போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News September 20, 2025

திருவள்ளூரில் இன்று மின் தடை…! உங்க ஏரியா உள்ளதா?

image

திருத்தணி, பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், அருங்குளம், குன்னத்தூர், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, பெருமாநல்லூர், நொச்சிலி, கோணசமுத்திரம். பள்ளிப்பட்டு, நெடியம், கொளத்துார், புண்ணியம், பொதட்டூர் பேட்டை, சொராக்காய்பேட்டை, காக்களூர், பாண்டரவேடு, ஆர்.கே.பேட்டை, ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (செப்.20) மின்தடை செய்யப்படும்.

error: Content is protected !!