News April 24, 2025

திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் அறிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராமம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள வேலை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும். இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *தெரிந்தவர்களுக்கு பகிரவும்*

Similar News

News February 25, 2026

திருவள்ளூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 25, 2026

திருவள்ளூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News February 25, 2026

திருத்தணிக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் !

image

திருவள்ளூர்: திருத்தணியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 4.50 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன பேருந்து நிலையம் நாளை திறக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து பணிமனை அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் பிரதாப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதிய பேருந்து நிலையம் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!