News July 6, 2025
திருவள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை (044-27660250) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962579>>தொடர்ச்சி<<>>
Similar News
News July 6, 2025
பழமையான சக்தி வாய்ந்த கோயில்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் பாபஹரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இந்த கோயிலுக்கு வந்து சிவா பெருமாளை மனதார தரிசிப்பதின் வழியே வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும் பக்தர்களின் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீர்ந்து போதும் என்பது ஐதீகம். கஷ்டத்தில் உள்ள நண்பர்களுக்கு பகிரவும்.
News July 6, 2025
திருவள்ளூர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் சிலை அமைக்க ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில், முன்னாள் குடியரசுத் தலைவரும் கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணர்களின் ஒருவர் சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நடுநிலைப் பள்ளியையும், அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையத்தை அமைச்சர் நாசர் அவர்களும், மாவட்ட ஆட்சியாளர் திரு பிரதாப் அவர்களும் பார்வையிட்டனர்.
News July 6, 2025
திருவள்ளூர் உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

திருவள்ளூர் உழவர் சந்தையின் இன்று (ஜூலை 06) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.35, உருளை ரூ.35, பீர்க்கங்காய் ரூ.45, புடலங்காய் ரூ.50, அவரைக்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.45, பெரிய வெங்காயம் ரூ.30, பாகற்காய் ரூ.50, கத்திரிக்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.60, வாழைப்பழம் ரூ.45, தேங்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது