News November 16, 2024
திருவள்ளூரில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
Similar News
News March 3, 2026
திருவள்ளூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(57). இவர், பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 7 வயது பள்ளி மாணவிக்கு டிரைவர் பன்னீர் செல்வம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
News March 3, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News March 3, 2026
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் பெற்ற ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரதாப் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை இன்று (மார்ச்.2) மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.


