News December 12, 2025
திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
Similar News
News December 12, 2025
திருவள்ளூர்: மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு மாற்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில், மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (டிச.13) மற்றும் (டிச.14) நடைபெற இருந்த நிலையில், தற்போது (டிச.27) மற்றும் (டிச.28) அன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள், விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
News December 12, 2025
திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
News December 12, 2025
திருவள்ளூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருவள்ளூர்: மூலக்கடையில் 15 வயது சிறுமி, நேற்று (டிச.11) புழல் பகுதி உறவினர் வீடு சென்று தன் வீடு செல்ல புழலில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த லாரி மூலக்கடை செல்வதாக டிரைவர் கூறவே நம்பி சிறுமி லாரியில் ஏறினார். சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி சிறுமியை லாரியில் அந்த டிரைவர் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில், டிரைவரை போலீசார் கைது செய்தனர்.