News January 7, 2026
திருவள்ளூரில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News January 28, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

மணவாளநகர்போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மணவாளநகர் போலீசார் பட்டரைப் பகுதியில் அதிரடி சோதனை செய்தனர். இதில், ராமதாஸ் தெருவைச் சேர்ந்த ஏழுமலையிடம்(54) 128 கிலோ குட்கா, வெங்கடேசன்(47) என்பவரிடம் 128 கிலோ குட்கா என பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 28, 2026
திருவள்ளூரில் நாளை பவர் கட்!

ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.29) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஊத்துக்கோட்டை, தாரட்சி, போந்தவாக்கம், அனந்தேரி, மாம்பாக்கம், மாமண்டூர், வேலகாபுரம், வேலகமகண்டிகை, பென்னலூர்பேட்டை, காசிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
திருவள்ளூரில் வாலிபர் படிதாப பலி!

திருவள்ளூர்: கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கௌரி சங்கர் (29) என்பவர், நேற்று முன் தினம் நண்பர்களுடன் அருகில் உள்ள ஏரியில் மீன்பிடிக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், நண்பர் அசோக் குமார் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று(ஜன.27) காலை சேற்றில் புதையுண்டு கிடந்த அவரது உடலை மீட்டனர்.


