News November 23, 2025
திருவள்ளூரில் இன்றைய ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (22.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News February 2, 2026
திருவள்ளூர்: கடைகளில் வாங்கிய பொருட்கள் சரியில்லையா?

சில சமயம் நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள் தரமற்றோ, பழைய பொருட்களாகவோ வரலாம். இதை கடை ஓனர் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தைத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (04116 – 27664823) தொடர்பு கொள்ளலாம்.ஷேர்
News February 2, 2026
போரூர் ஏரியில் ஆண் சடலம்!

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே உள்ள போரூர் ஏரியில் நேற்று(பிப்.1) ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். இதனைத் தொடர்ந்து இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 2, 2026
திருவள்ளூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


