News November 2, 2025
திருவள்ளூரில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (2.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News November 3, 2025
திருவள்ளூர்: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ-சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம். பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம்தான். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News November 3, 2025
திருவள்ளூர்: வெளிநாடு செல்ல ஆசையாய் இருந்தவருக்கு விபூதி

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சேரலாதன் (29). இவர், ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் துபாய் செல்வதற்காக விசா வாங்கி தருமாறு கேட்டார். இதற்காக சேரலாதனிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நிலையில், போலியான வீசா தந்ததால் சேரலாதன் கைது செய்யப்பட்டார்.
News November 3, 2025
திருவள்ளூர்: 15அடி உயரத்தில் இருந்து விழுந்து பெயின்டர் பலி

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், 50. கட்டட தொழிலாளி. இவர் நேற்று மாலை, பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில், உள்ள வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டடத்தின், பக்கவாட்டு பகுதிகளில் பெயின்ட் அடிப்பதற்காக கயிற்றில் நின்று வேலை பார்த்தபோது, 15அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


