News April 13, 2025

திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தை

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின் பேரில், இன்று திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை துவங்கவுள்ளது. காய்கறி, பழம், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி, தேன், பனை வெல்லம் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்தை, ஒவ்வொரு மாதத்தின் 2வது ஞாயிறு காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News April 15, 2025

டிகிரி இருந்தால் போதும்; மெட்ராஸ் ஐகோர்டில் வேலை

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>இணையத்தில் <<>>வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

News April 15, 2025

கள்ளக்காதலியை எரித்து கொன்ற ஆட்டோ ஓட்டுனரும் உயிரிழப்பு

image

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நுாரிஷாவுக்கும்(42) திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான டில்லிபாபுக்கும்(47) தகாத உறவு இருந்துள்ளது. இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் டில்லிபாபு திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதுடன், நுாரிஷாவையும் கட்டி பிடித்துக் கொண்டார். இதில் கடந்த 11ம் தேதி நுாரிஷா உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று டில்லிபாபுவும் பலியானார்.

error: Content is protected !!