News August 31, 2025

திருவள்ளூரில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

திருவள்ளூர் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த <>இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

Similar News

News September 3, 2025

BREAKING: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை

image

திருவள்ளூர், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சக தொழிலாளி உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு நேற்று வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இது தொடர்பாக தொழிலாளர்கள் 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News September 3, 2025

திருவள்ளூர் மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது 0427-2451943 என்ற எண்ணை அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

BREAKING: பொன்னேரியில் கொலை

image

பொன்னேரி அருகே அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் நேற்று காலை பொன்னேரி அரசு பேருந்து பணிமனை அருகேயுள்ள சுடுகாட்டில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!