News March 22, 2025
திருவள்ளூரில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூரில் இன்று (மார்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர், ஆவடி, திருமழிசை போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை அல்லது ரெயின்கோர்டை எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
Similar News
News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க
News March 23, 2025
திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூரில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்
News March 23, 2025
நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

திருத்தணி – அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருந்து புறவழி நெடுஞ்சாலை செல்லும் சாலையோரம், லாரி ஒன்று நேற்று (மார்.22) நின்று கொண்டிருந்தது. அப்போது, அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற லாரி, நின்று கொண்டு இருந்த லாரியின் மீது பலமாக மோதியது. இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கந்தன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.