News June 4, 2024
திருவள்ளூரின் மகுடம் யாருக்கு?

2024 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் 68.31% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் சசிகாந்த் செந்திலும் (காங்), அதிமுக சார்பில் நல்ல தம்பியும் (தேமுதிக), பாஜக சார்பில் பாலகணபதியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
Similar News
News April 20, 2025
திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட திட்ட அலுவலர் – 044-27660421, ▶மாவட்ட கருவூல அலுவலர் – 044-27660888, ▶முதன்மைக் கல்வி அலுவலர் – 9384034214, ▶திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர், – 7373002993, ▶பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் – 7373002996, ▶திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் – 9445000412, ▶பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் – 9445000410, ▶திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் – 9445000411, ▶மாவட்ட சமூக நல அலுவலர் – 044-27663912.
News April 20, 2025
உருக்கு ஆலையில் தீப்பிழம்பு சிதறி தொழிலாளர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்துர்நத்தம் கிராமத்தில் உள்ள தனியார் உருக்கு ஆலையில், பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் (28) ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். கடந்த 10ஆம் தேதி ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தீப்பிழம்பு அவர் மீது சிதறி விபத்து ஏற்பட்டது. உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 20, 2025
சிறுவாபுரி பால சுப்ரமணியர் கோயில்

சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என விரும்புபவர்கள் செவ்வாய்கிழமையில் சிறுவாபுரி முருகன் கோயிலில் வேண்டிக் கொண்டால், அடுத்த ஆண்டு அதே நேரத்திற்குள் அவர்களுக்கு சொந்த வீடு கட்டி முடிக்கும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பலரின் சொந்த வீடு கனவை இந்த முருகன் நிறைவேற்றி வைத்துள்ளார். இன்றும் நிறைவேற்றி வைத்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஷேர் பண்ணுங்க