News February 15, 2025

திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

image

சிவகங்கை தாகியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த மாதம் இருபதாம் தேதி தன்னுடைய உறவினரான ராஜுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது முன்விரோதம் காரணமாக சிவகங்கை திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (25) என்பவர் அறிவாளால் வெட்டினார். இந்த வழக்குத் தொடர்புடைய மாரிமுத்துவை எஸ்பி பரிந்துரையின் படி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

Similar News

News August 21, 2025

சிவகங்கை: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு..!

image

தமிழக அரசு சார்பில், வேலையில்லா இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12th, டிப்ளமோ (அ) டிகிரி முடித்து, 18-35 வயதுடையவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன், பிரபல நிறுவனங்களில் Data Analyst, AI devloper ஆக பணியாற்றும் வாய்ப்புள்ளது. மேலும் விவரங்களுக்கு<> இந்த லிங்கை கிளிக்<<>> பண்ணுங்க. SHARE IT..!

News August 21, 2025

சிவகங்கையில் நாளை உயர்வுக்குபடி முகாம்!

image

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நாளை ஆக.22 மாணவர்கள் பயன்பெறும் வகையில், 2024-2025 ஆம் ஆண்டில் 10,12ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெறாத மாணவ – மாணவிகளுக்கான “உயர்வுக்குப்படி” முகாம் நடைபெற உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், ஐ டி ஐ, பாலிடெக்னிக் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 21, 2025

சிவகங்கை : 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை <>#இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு நவ.9-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!