News December 18, 2025
திருவள்ளுர்: 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் நேற்று(டிச.17) விற்பனை செய்வதற்காக பிகார் மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தி வந்த ஆலாம் என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Similar News
News December 18, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர்: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களும், பிற மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாதபோது தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உறுதி மொழி படிவம் வழங்க வேண்டும். மேலும் (ஜன.1) அன்று 18 வயதாகும் அனைத்து நபர்களும் புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க உறுதி மொழி படிவம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
News December 18, 2025
கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்த ஆட்சியர்

திருவள்ளுர் ஆட்சியர் மு.பிரதாப் இன்று (டிச.18) நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.56 கோடியில் தீரூர் அடுத்த வேப்பம்பட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 13 கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
News December 18, 2025
திருவள்ளூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் (டிச.20) மற்றும் (டிச.21) ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் உதவி மையங்கள் செயல்பட உள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து உதவி மையங்களில் வழங்கிடுமாறும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


