News October 25, 2025

திருவள்ளுர்: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

திருவள்ளுரில் பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு இன்று உபரி7,500 கன அடியில் இருந்து 9,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிகரிப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News February 9, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரைச் சேர்ந்தவர் ரித்தீஸ்(17). இவரும், இவருடைய உறவினரான நரேஷ்(18) என்பவரும் நேற்று(பிப்.8) பைக்கில் பெரியபாளையம் சென்று திரும்பிய போது மாநில நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற பைக் மீது மோதினர். இதில், தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியதில் ரித்தீஸ், சம்பவ இடத்திலேயே பலியானார். முன்னால் சென்ற பைக்கை ஓட்டிய பரசுராமன்(35), நரேஷ் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News February 9, 2026

கும்மிடிப்பூண்டியில் ரயிலில் இருந்து குதித்து பலி!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் இருந்து கடந்த பிப்.4ஆம் தேதி சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயிலில் சில வடமாநில இளைஞர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களை ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் பயந்துபோன ஒரு இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், நேற்று(பிப்.8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 9, 2026

பூந்தமல்லியில் 15 சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி மகாலட்சுமி நகரில் தாயுடன் வசித்து வந்த 15 வயது சிறுமி, நேற்று(பிப்.8) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த போலீசார் விசரணையில், சிறுமியின் பெற்றோர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தாயுடன் வசித்து வந்த சிறுமி வீட்டிற்கு தாமதமாக வருவதை தாயார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுமி இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிய வந்தது.

error: Content is protected !!