News August 31, 2025
திருவள்ளுர்:அதிகாரிகளால் ரூ.12 கோடி வீண்; கலெக்டர் உத்தரவு

திருவள்ளுர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளுக்கு, 2023 – 24ம் ஆண்டு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், 12.97 கோடி ரூபாய் பணிகளை கலெக்டர் பிரதாப் ரத்து செய்து, நிதியை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் ரூ.3,32,46,204 திருப்பி அனுப்ப பட உள்ளது.
Similar News
News September 1, 2025
திருவள்ளூர்: 8th போதும்; சொந்த ஊரில் அரசு வேலை.. APPLY

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, புழல், சோழவரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.15,700-50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் செ.30ம் வரை இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News September 1, 2025
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வைசாலி நகரில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நள்ளிரவில் ராஜ் கமல் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நேற்று மாலை திருப்பாச்சூர் கொண்டஞ்சேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.