News December 29, 2025

திருவண்ணாமலை: 15 பேர் அதிரடி கைது!

image

செய்யாறு கருணாநிதியின் சிலையைத் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது செய்யாறைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜனதா நிர்வாகிகள் 15 பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்தனர். அவர்களைத் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்த போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 2, 2026

சந்தவாசல் வன சரகத்துக்கு உட்பட்ட ஆத்துவம்பாடி பகுதியில் மர்ம விலங்கு

image

ஆரணி அருகே சந்தவாசல் வன சரகத்துக்கு உட்பட்ட ஆத்துவம்பாடி பகுதியில் மர்ம விலங்கு தாக்கியதில் கன்று குட்டி ஒன்று உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தாக்கிய விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு,

News February 2, 2026

தி.மலை: “அண்ணா நா சாக போறேன்”- தம்பி!

image

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா இடையங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாபு ஷரீப் என்பவரின் மகன் உமர் (18). இவர் செய்யாறை சேர்ந்த நண்பர் பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது அண்ணன் முபாரக் அலி என்பவரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 2, 2026

தி.மலையில் புள்ளிமானை கடித்து குதறிய தெருநாய்!

image

திருவண்ணாமலை பே கோபுரம் 1-வது தெருவில், மலையடிவார வனப்பகுதியிலிருந்து நேற்று உணவு தேடி வந்த புள்ளி மானை நாய் கடித்து காயப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

error: Content is protected !!