News December 28, 2024

திருவண்ணாமலை விவசாயிகளுக்கு விருது அறிவிப்பு 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், தமிழக அரசின் மாநில அளவிலான டாக்டர் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோ. கண்ணகி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 9, 2026

தபால் அலுவலகங்களில் சுகாதார காப்பீட்டு சிறப்பு முகாம்

image

இந்தியா போஸ்ட் குறைந்த பிரீமியத்தில் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.2,298 செலுத்தி ரூ.20 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். 18–60 வயதுடையவர்கள் மற்றும் 91 நாட்கள் முதல் 25 வயது குழந்தைகள் சேரலாம். மேலும் ரூ.548 செலுத்தி ரூ.10 லட்சம் விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை கோட்ட தபால் அலுவலகங்களில் மார்ச் 14 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News March 9, 2026

தி.மலை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 9, 2026

தி.மலை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

error: Content is protected !!