News September 26, 2025
திருவண்ணாமலை: விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் தலைமையில் இன்று (26.09.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செப்டம்பர் மாத மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் விவசாயிகள் நேரடியாக தங்கள் பிரச்சினைகள், பரிந்துரைகள், திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
Similar News
News September 26, 2025
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி

தமிழ்நாட்டின் மாபெறும் கல்வி எழுச்சியை கொண்டாடும் விதமாக ”கல்வியில் சிறந்த தமிழ்நாடு ” என்னும் கருப்பொருளில் திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (25.09.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், அரசு அதிகாரிகள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
News September 26, 2025
தி.மலைக்கு விஜய் எப்போது வருகிறார்? பயணத்தில் மாற்றம்

தவெக தலைவர் விஜய் தி.மலையில் வரும் நவ.8ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.15ஆம் தேதி தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
News September 26, 2025
தி.மலை: தலை நசுங்கி கல்லூரி மாணவன் பலி!

தி.மலை, போளூர் அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். தி.மலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் அரசு பேருந்தில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று காலை வழக்கம் போல கல்லூரி செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறிய போது, நிலை தடுமாறு கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பலியானார். இது குறித்து போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.