News August 8, 2025
திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரெயில்

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலத்திற்கு செல்வது வழக்கம். ஆகஸ்ட் மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் அதிக போக்குவரத்தை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
Similar News
News August 9, 2025
இருசக்கர வாகனத்தில் வைத்த பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கல்லாலிப்பட்டு பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவர் தனது ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.95,000 திருடப்பட்டதாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வங்கியில் நகையை அடமானம் வைத்து பெற்ற ரூ. 59,000 மற்றும் வீட்டில் இருந்து எடுத்து வந்த ரூ.36,000 என மொத்தம் ரூ.95,000 திருடப்பட்டுள்ளது. செஞ்சி – தி.மலை சாலையில் உணவகத்தில் உணவருந்திய போது சம்பவம் நடந்துள்ளது.
News August 9, 2025
மாநில கல்விக் கொள்கையில் தவறான முடிவு – விழுப்புரம் எம்பி

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று இன்று ஆகஸ்ட் 8 வெள்ளிக்கிழமை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இது தவறான முடிவு என்றும் மறுபரிசீலினை செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் வி.சி.க எம்.பி ரவிக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
News August 8, 2025
விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு முதல் கிழக்கு பாண்டி சாலை பகுதியில் மாதாகோவில் பஸ் நிறுத்தம் வரையில், தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.