News November 17, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை

image

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக,திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கண்ணமங்கலம், ஆரணி, சேவூர், ராட்டினமங்கலம், படவேடு, சந்தவாசல், வண்ணங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள 97 ஏரிகள் நிரம்பி வருகினறன.

Similar News

News August 6, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் குறித்து விவரம்

image

காவல்: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 06) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 6, 2025

தி.மலை: தாசில்தார் மீது புகார் அளிப்பது எப்படி?

image

திருவண்ணாமலை மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04175-232619) புகாரளிக்கலாம். *இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News August 6, 2025

தி.மலையில் பேராசிரியர்கள் போரட்டம்

image

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றிட கூறி தமிழக அரசினை வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட்.06) கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் முன்பு கோஷமிட்டு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று கூறினார்கள்.

error: Content is protected !!