News June 4, 2024
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் 9 வது சுற்று

திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 9 ஆவது சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் 245151 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 128567 வாக்குகளும்,
பாஜக வேட்பாளர் 70423 வாக்குகளும், நாத வேட்பாளர் 34910 வாக்குகள் பெற்று உள்ளன. இதன்படி
திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
Similar News
News September 12, 2025
இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உள்ள காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (12-09-2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. தங்களின் பகுதிகளில் நடைபெறும் அசம்பாவிதம் குறித்து கொடுக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் தொலைபேசி எங்களை தொடர்புகொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
News September 12, 2025
திருப்பத்தூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஆறாவது மருத்துவ முகாம் நாளை (13-09-2025) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜங்காலபுரம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் காலை 8:00 மணிமுதல் மாலை 4:00 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் இன்று (12.09.2025) திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் பெண்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் சீதா பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.