News April 14, 2025

திருவண்ணாமலை இன்றைய வெயில் நிலவரம்

image

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், 100.4 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 15, 2025

மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில் <<>>வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளாம். பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

சிவலிங்க மேனியில் சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு

image

தி.மலையில் சிவலிங்க மேனியில் சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு நிகழ்ந்துள்ளது. தி.மலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை சன்னதியில், சிவலிங்க திருமேனியை சூரிய பகவான் வணங்குவதாக சொல்லப்படும் ஐதீகம். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்நிகழ்வு நடந்தேறியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!