News December 4, 2024

திருவண்ணாமலை அருகே 50 பேர் மீது வழக்கு பதிவு 

image

செய்யார் நகரில் மழை நீர் சூழ்ந்துள்ளதை அகற்றாத திருவத்திபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று செய்யார் நகரில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 ஆண்கள் 30 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும், இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News

News October 17, 2025

தி.மலை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

காஞ்சி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 17, 2025

தி.மலை: மின்னல் தாக்கி இளைஞர் பலி!

image

ஆரணி அருகே சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் ஏழுமலை (22). நேற்று வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில், இடி தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 17, 2025

தி.மலை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

image

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.17) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன. தி.மலை எஸ்.கே.பி இன்ஜினியரிங் கல்லூரி, வந்தவாசி-முத்து குமரன் மண்டபம், சுமங்கலி-வி.பி.ஆர்.சி கட்டிடம், என்.எஸ். செல்வம் மஹால்-கீழ்சீத்தாமங்கலம், சுகன்யா திருமண மண்டபம்-சோ.மண்டப்பட்டி, சேத்துப்பட்டு-ராஜா முருகன் திருமண மண்டபம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!