News September 14, 2024

திருவண்ணாமலை அருகே கோவில் சுற்றுச்சுவர் அகற்றம்

image

திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு-மணலூா்பேட்டை சாலையில், நான்கு வழிச்சாலை பணிக்காக 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் சுற்றுச்சுவா் அகற்றப்பட்டது. கோயிலின் ஒரு பக்க சுற்றுச்சுவா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிா்ப்புத் தெரிவித்தனர். பின்னர், நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினர்.

Similar News

News October 21, 2025

தி.மலை: 10th பாஸ் போதும்…இஸ்ரோவில் வேலை!

image

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th பாஸ் முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 18-35 வயதுடையவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து வரும் நவ்.14ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இஸ்ரோவில் வேலை செய்ய இதைவிட அருமையான வாய்ப்பு கிடையாது. உடனே ஷேர் பண்ணுங்க

News October 21, 2025

தி.மலை ஆட்சியர் விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராபி பருவ சம்பா நெல் பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாக கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். ஓர் ஏக்கருக்கு ரூ.538 பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சிட்டா, ஆதார், வங்கி புத்தகம், சாகுபடி அடங்கல் ஆவணங்களுடன் பொதுசேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது வங்கிகளில் காப்பீடு செய்து கொள்ளலாம்.

News October 21, 2025

தி.மலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்திற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!