News March 20, 2024
திருவண்ணாமலை அருகே குவிந்த பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ராஜவீதியில் உள்ள தனியார் கணினி மையத்தில் இன்று காலை முதல் பெண்கள் குவிந்தனர். சுயமாக கைத்தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.10,0,000 வரை வட்டி இல்லாத கடன் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கடன் தொகையை பெறும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்வதற்காக கணினி மையத்தில் பெண்கள் குவிந்துள்ளனர்.
Similar News
News November 14, 2025
தி.மலையில் தீவிர சோதனை!

தி.மலையில் டிச.3ஆம் தேதி மகாதீபத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் போலீசார் இன்று (நவ.14) தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் வளாகம், ராஜகோபுரம், அம்மன் தேர் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது.
News November 14, 2025
தி.மலை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தி.மலை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதியிலல் வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <
News November 14, 2025
தி.மலை: கலெக்டர் ஆபீசில் தீக்குளித்தவர் பலி!

தி.மலை, கலசப்பாக்கம் அடுத்த கீழ்தாமரைப்பாக்கத்தில் குமார் என்பவருக்கும் அவரது சகோதரருக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் குமாரும் அவரது மனைவி பூங்கொடியும் தீக்குளித்தனர். 45 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி, சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.13) உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


