News August 9, 2024
திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
திருவண்ணாமலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (31.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
திருவண்ணாமலை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்ட அட்டவணை

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நவம்பர் மாத மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் கோட்ட அளவில் நடைபெற உள்ளன. வந்தவாசி – நவ.4ம் தேதி, செங்கம் நவ.6, போளுர் நவ.11, சேத்துப்பட்டு நவ.13, செய்யாறு நவ.18, திருவண்ணாமலை கிழக்கு நவ.20, ஆரணி நவ.25 , திருவண்ணாமலை மேற்கு நவ.27-ல் கூட்டம் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் காலை 11 மணியளவில் நடைபெறும் என மின்துறை தெரிவித்துள்ளது.
News October 31, 2025
தி.மலை: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள் <


